என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றிபெறும்- தங்கதமிழ்செல்வன் பேட்டி
    X

    திருவாரூர் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. அமோக வெற்றிபெறும்- தங்கதமிழ்செல்வன் பேட்டி

    திருவாரூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதால் அங்கே நாங்கள் அமோக வெற்றி பெறுவோம் என்று தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். #thangatamilselvan #thiruvarurelection

    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்தில் அ.ம.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ் செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    செந்தில் பாலாஜி கட்சியை விட்டு சென்றால் அ.ம.மு.க. வில் உள்ள அனைவரும் கட்சியை விட்டு சென்று விடுவார்கள் என்று கூற முடியாது. தேர்தலை சந்திப்போம் என்று எங்கள் பொதுச்செயலாளர் கூறினார்.

    தற்சமயத்திற்கு திருவாரூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. அங்கே நாங்கள் அமோக வெற்றி பெறுவோம். உளவுத்துறை அ.ம.மு.க. தான் வளர்ச்சியடைந்து வருகிறது என தெரிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலோடுதான் இடைத்தேர்தல் நடக்கும். திருவாரூர் மட்டும் நாளை மறுதினம் அறிவிக்க வாய்ப்புள்ளது.

    அலங்காநல்லூரில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் அ.ம.மு.க.வை சேர்ந்தவர் துணைத்தலைவர் ஆவதற்கு செல்லூர் ராஜூ மற்றும் ராஜன்செல்லப்பா உதவியிருக்கலாம். இனி வரும் தேர்தலில் அவர்கள் உதவி செய்தாலும், இல்லையென்றாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #thiruvarurelection 

    Next Story
    ×