என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
உடன்குடியில் இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
By
மாலை மலர்15 Dec 2018 12:58 PM GMT (Updated: 15 Dec 2018 12:58 PM GMT)

உடன்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உடன்குடி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி உடன்குடி, சாத்தான்குளம் ஒன்றிய குழு சார்பில் உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் உடன்குடி பகுதியில் பழுதடைந்த ரோடுகளை புதுப்பிக்க கோரியும், நிறுத்தப்பட்ட மினி பஸ்களை மீண்டும் இயக்க கோரியும், மணப்பாடு மீனவர்களுக்கு தூண்டில் வளைவு அமைக்க உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆண்டி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், உதவி செயலாளர்கள் கணபதி, முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சங்கர், ராஜேஷ், பாலன், பூங்காவனம் உட்பட பலர் பேசினர்.
முடிவில் உடன்குடி ஒன்றிய பொருளாளர் நாராயணன் நன்றி கூறினார்.
Next Story
×