என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தந்தை - மகன் காயம்
    X

    லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தந்தை - மகன் காயம்

    மோட்டார் சைக்கிள் லாரியின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜான்பிரான்சிஸ்கென்னடி, ஆர்த்தர்வில்சன் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர்.
    குளித்தலை:

    கரூர் கிழக்கு பங்களாத்தெருவை சேர்ந்த ஜான்பிரான்சிஸ் கென்னடி. இவரது மகன் ஆர்த்தர்வில்சன் (வயது 18). இவர்கள் 2 பேரும் நேற்றுமுன்தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் கரூரில் இருந்து குளித்தலை வழியாக திருச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். குளித்தலை அருகே குறப்பாளையம் பிரிவு சாலை அருகே சென்றுகொண்டிருந்தபோது, இவர்களுக்கு முன்னால் சென்ற லாரி டிரைவர் எந்தவித முன்னெச்சரிக்கையும் செய்யாமல் லாரியை பிரிவு சாலையில் திருப்பியுள்ளார்.

    இதனால் எதிர்பாராதவிதமாத மோட்டார் சைக்கிள் லாரியின் பின் பகுதியில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜான்பிரான்சிஸ்கென்னடி, ஆர்த்தர்வில்சன் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 2 பேரும் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×