search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் உள்பட 3 பெண்கள் மாயம்
    X

    நெல்லை மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் உள்பட 3 பெண்கள் மாயம்

    நெல்லை மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் உள்பட 3 பெண்கள் மற்றும் ஒரு கூலி தொழிலாளி என 4 பேர் மாயமாகி உள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் உள்பட 3 பெண்கள் மற்றும் ஒரு கூலி தொழிலாளி என 4 பேர் மாயமாகி உள்ளனர். இதுபற்றிய விபரம் வருமாறு:-

    கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சுமணி. இவரது மகள் முருகேஸ்வரி (வயது19). இவர் கடையநல்லூரில் உள்ள கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் முருகேஸ்வரிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர்.

    நாளை மறுநாள் 13-ந்தேதி (புதன்கிழமை) திருமணம் நடக்க உள்ளது. இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி அதிகாலையில் வீட்டில் இருந்த முருகேஸ்வரியை காணவில்லை. இது குறித்து அவரது தந்தை பிச்சுமணி கடையநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஸ்வரியை தேடி வருகிறார்கள்.

    நெல்லை தாழையூத்து சங்கர்நகரை சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன். இவரது 17 வயது மகள் பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 8-ந்தேதி கல்லூரிக்கு சென்ற மாணவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து வெங்கட சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாளையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலசெவல் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் ராஜ் (வயது56). இவரது மனைவி சரஸ்வதி (38). கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி ராதாபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்ற சரஸ்வதி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. தாய் வீட்டுக்கும் செல்லவில்லை. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

    இதுகுறித்து சுந்தர்ராஜ் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதியை தேடி வருகிறார்கள்.

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை அடுத்த தச்சங்குளம் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது35), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி (33), கடந்த 3-ந்தேதி கூலி வேலைக்கு சென்ற சொக்கலிங்கம் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து ஜெயலட்சுமி, களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சொக்கலிங்கத்தை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×