என் மலர்
செய்திகள்

குட்கா ஊழல் வழக்கில் உரிய விசாரணை தேவை- சி.பி.ஐ. இயக்குனருக்கு திமுக எம்எல்ஏ கடிதம்
குட்கா ஊழல் வழக்கில் உரிய விசாரணை கோரி சி.பி.ஐ. இயக்குனர் மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆகியோருக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கடிதம் அனுப்பியுள்ளார். #dmk #gutkhacase #cbidirector #ministervijayabaskar
சென்னை:
சி.பி.ஐ. இயக்குனர் மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆகியோருக்கு, தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தையே உலுக்கிய குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக கண்ணன், உதவி அதிகாரியாக பிரமோத்குமார் ஆகியோர் இருந்து வந்தனர். அவர்கள் மூலம் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் இருவருமே மாற்றப்பட்டு இருக்கின்றனர்.
அதேநேரம் சி.பி.ஐ. இயக்குனரும் கட்டாய விடுப்பில் சென்றிருக்கிறார். அவருக்கு பதிலாக புதிய இயக்குனர் அவசரமாக பொறுப்பேற்றிருக்கிறார். அதேவேளை இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றபத்திரிகையிலும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளின் பெயர் இடம்பெறவில்லை. இந்த போக்கு குட்கா
வழக்கில் தவறான முன்னுதாரணமாக இருக்கிறது.
வழக்கில் தவறான முன்னுதாரணமாக இருக்கிறது.எனவே குட்கா ஊழல் வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காட்டப்பட வேண்டும். இந்த தவறான போக்கு தொடரும் பட்சத்தில் சரியான நீதியை அடைய சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று வழக்கு தொடரவேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்படுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #dmk #gutkhacase #cbidirector #ministervijayabaskar
Next Story






