search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயலில் முழுவதும் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சம்- முதல்வர் அறிவிப்பு
    X

    கஜா புயலில் முழுவதும் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சம்- முதல்வர் அறிவிப்பு

    கஜா புயலில் முழுவதும் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #gajacyclone #relief #edappadipalanisamy
    சென்னை:

    வங்க கடலில் உருவான கஜா புயல் நாகை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது.  இந்த புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்படைந்தன.

    கஜா புயல் பாதிப்பு பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதுவரை நடந்த கணக்கெடுப்பின்படி 12 மாவட்டங்களில் 88,102 ஹெக்டேர் வேளாண், தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பு என தகவல் தெரிவிக்கின்றது.

    2 மாவட்டங்களில் 32,707 ஹெக்டேர் நெல், 30,100 ஹெக்டேர் தென்னை, 7,636 ஹெக்டேர் மக்காச்சோளம் சேதம் அடைந்துள்ளன.

    கஜா புயலால் முந்திரி பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு ரூ.18,000 வழங்கப்படும். சேதமடைந்த பயிர்களை வெட்டி அகற்றிட மரத்திற்கு ரூ.500, மறுசாகுபடி செய்ய 40-50% மானியம் வழங்கப்படும்.

    புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.600, அவற்றை வெட்ட ஒரு மரத்திற்கு ரூ.500 வழங்கப்படும். சுமார் 175 மரங்கள் நடப்பட்டுள்ள ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1,92,500 நிவாரணம் வழங்கப்படும்.

    சொட்டு நீர் பாசனத்திற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியம், மற்ற விவசாயிகளுக்கு 75% மானியம் வழங்கப்படும். சொட்டுநீர் பாசனத்தில் மறுசாகுபடி செய்ய ரூ.75,000 வழங்கப்படும்.

    இதேபோன்று முழுவதும் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.10,000 மற்றும் பகுதியாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.4,100 நிவாரண உதவி வழங்கப்படும்.

    கஜா புயலில் முழுவதும் சேதம்டைந்த விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சம், பகுதியாக சேதமடைந்த விசைப்படகுகளுக்கு ரூ.3 லட்சம், வலைகள் மட்டும் சேதமடைந்திருந்தால் ரூ.10,000, பழுது நீக்கம் செய்ய ரூ.5000 வழங்கப்படும்.

    முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு ரூ.42,000 வழங்கப்படும்.  முழுவதும் சேதமடைந்த எஃப்ஆர்பி படகுகள் மற்றும் வலைக்கு ரூ.85000 வழங்கப்படும்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் இணைப்பு சீரமைப்பு பணிகளை மின்சார வாரியம் விரைந்து முடிக்க முதற்கட்டமாக ரூ.200 கோடி வழங்க முதல்வர் பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நாளை ஹெலிகாப்டரில் செல்ல உள்ளேன். பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கவுள்ளேன் என்றும் முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். #gajacyclone #relief #edappadipalanisamy
    Next Story
    ×