என் மலர்
செய்திகள்

வத்தலக்குண்டு அருகே வெந்நீர் கொட்டியதில் கைக்குழந்தை பலி
வத்தலக்குண்டு அருகே வெந்நீர் கொட்டியதில் கைக்குழந்தை பரிதாபமாக உயிரிந்தது.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு மேற்கு தெருவை சேர்ந்தவர் முரளி (வயது30). கூலித்தொழிலாளி. இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், மோகனரூபன் என்ற 11 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
சம்பவத்தன்று மல்லிகா வீட்டில் சுடுதண்ணீர் காய்ச்சி அந்த பாத்திரத்தை வைத்திருந்தார். தவழ்ந்து விளையாடிக்கொண்டிருந்த மோகனரூபன் அந்த பாத்திரத்தை தட்டி விட்டதில் வெந்நீர் அவன் உடலில் கொட்டியது.
படுகாயங்களுடன் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவன் மேல் சிகிச்சைக்கு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். ஆனால் அங்கு சிகிசிசை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து வத்தலக்குண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story