என் மலர்
செய்திகள்

சந்திரபாபு நாயுடு, ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாடகம் - தம்பிதுரை
சந்திரபாபு நாயுடு மற்றும் ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாடகம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #ThambiDurai #ChandrababuNaidu #MKStalin
மணப்பாறை:
வரும் பாராளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி பெரும் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இது தொடர்பாக மணப்பாறையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு – ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாடகம் என்றார்.
ஏற்கனவே சந்தித்த சந்திரசேகர ராவ் என்ன ஆனார்? என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார். #ADMK #ThambiDurai #ChandrababuNaidu #MKStalin
Next Story






