search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடுமுடி அருகே இன்று பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்
    X

    கொடுமுடி அருகே இன்று பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்

    கொடுமுடி அருகே இன்று பக்தர்கள் சென்ற வேன் ரோட்டில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை, நம்பியூர், கீரனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஈரோட்டில் இருந்து ராமேசுவரம் கோவிலுக்கு வேனில் புறப்பட்டு சென்றனர்.

    கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு அவர்கள் நேற்று ஈரோட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் வந்த வேனை சென்னிமலையை சேர்ந்த சத்யராஜ் (வயது 26) என்பவர் ஓட்டி வந்தார்.

    இன்று அதிகாலை 2 மணி அளவில் அந்த வேன் கொடுமுடி அருகே கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையில் வாழநாயக்கன்பாளையம் பிரிவில் வந்து கொண்டிருந்தது.

    திடீரென அங்கு வைக்கப்பட்டிருந்த டிவைடர் மீது மோதிய வேன் ரோட்டில் கவிழ்ந்தது. வேனில் தூங்கிக் கொண்டு இருந்த பக்தர்கள் விபத்து காரணமாக வேனுக்குள் சிக்கி சத்தமிட்டனர்.

    அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கொடுமுடி போலீசாருக்கும் இதுபற்றிய தகவல் தெரியவந்தது. அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    வேனின் இடிபாடுகளுக் குள் சிக்கிய பக்தர்கள் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த டிரைவர், பக்தர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

    1. சத்யராஜ் (26),

    2. குமராயாள் (48),

    3. ஜெயந்தி (28),

    4. கண்ணம்மாள் (20),

    5. அருக்காயி (60),

    6. லட்சுமணன் (23),

    7. சண்முகம் (50),

    8. சாந்தி (40),

    9. மீனா (23).

    இன்னொருவர் பெயர் விவரம் தெரியவில்லை.

    காயம் அடைந்தவர்கள் அனைவரும் கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சு மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    Next Story
    ×