என் மலர்

  செய்திகள்

  போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்- வாலிபர் கைது
  X

  போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்- வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராயபுரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற வாலிபரை சக போலீசார் பிடித்து கைது செய்தனர்.
  ராயபுரம்:

  ராயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகஸ்டின் மற்றும் போலீசார் நேற்று இரவு எம்.சி. ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு சென்ற பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கமலக்கண்ணனை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

  திடீரென அவர் சப்-இன்ஸ்பெக்டர் அகஸ்டினை தலையில் தாக்கி விட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓட முயன்றார். மற்ற போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews

  Next Story
  ×