என் மலர்

  செய்திகள்

  கோவை அருகே 2 வாலிபர்கள் கொலை
  X

  கோவை அருகே 2 வாலிபர்கள் கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை அருகே 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கோவை:

  கணபதி அருகே உள்ள உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார்(25). வெல்டிங் தொழிலாளி.

  இவர் இன்று காலை 8 மணி அளவில் பதிகவுண்டர் தோட்டம் 3-வது வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

  அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் பிரவீன் குமாரை வழிமறித்து கத்தியால் குத்தினர். இதில் அவரது தலை, கழுத்தில் கத்திக் குத்து விழுந்தது. இவர் அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவஇடத்திலேயே இறந்தார். உடனே கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

  தகவலறிந்து சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிரவீன் குமார் நேற்று மாலை தனது நண்பர்களை பார்த்து வருவதாக கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். நேற்று இரவு அவர் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்தியாக கூறப்படுகிறது.

  அப்போது நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விரோதத்தில் பிரவீன்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். பிரவீன்குமாருடன் சேர்ந்து மது அருந்தியவர்கள் யார்-யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சச்சின்(வயது 27). இவர் கோவை சரவணம்பட்டியை அடுத்த சின்ன வேடம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிறுவனத்தில் அவருடன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 5 பேர், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 17 பேர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

  தீபாவளியையொட்டி நிறுவனத்தில் நேற்று முன்தினம் போனஸ் வழங்கப்பட்டது. உடனே நெல்லையை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். நிறுவனத்தில் ஒடிசா மாநில தொழிலாளர்கள் மட்டும் தங்கி இருந்தனர்.

  இன்று அதிகாலை நிறுவனத்தின் அருகே உள்ள அத்திப்பாளையம் ரோட்டில் சச்சின் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். சம்பவ இடத்துக்கு சரவணம்பட்டி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

  சச்சினின் தலை, முகத்தில் காயங்கள் இருந்தன. அவரது தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. நேற்று இரவு அறையில் அவருடன் தங்கி இருந்த நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், நேற்று இரவு சச்சின் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றிய நிலையில் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.

  இது தொடர்பாக 5 வாலிபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×