என் மலர்

  செய்திகள்

  வெள்ளக்கோவில் அருகே கணவருடன் தகராறு- பெண் மாயம்
  X

  வெள்ளக்கோவில் அருகே கணவருடன் தகராறு- பெண் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  முத்தூர்:

  வெள்ளக்கோவில் அருகே உள்ள சேனாபதி பாளையத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சின்ன பொண்ணு (வயது 50).

  இவர்கள் மகன், மருமகளுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்கள். சம்பவத்தன்று செல்வத்துக்கும், சின்ன பொண்ணுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

  பின்னர் அன்று இரவு அனைவரும் தூங்க சென்றனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது சின்ன பொண்ணுவை காணவில்லை.

  பல இடங்களில் தேடி பார்த்தும், அந்த பகுதியில் விசாரித்து பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

  இதையடுத்து சின்ன பொண்ணு மாயமானது குறித்து வெள்ளக்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

  புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சின்ன பொண்ணுவை தேடி வருகிறார்கள்.
  Next Story
  ×