என் மலர்
செய்திகள்
வேதாந்தா குழுமத்திற்கு இடம் ஒதுக்க மத்திய அரசு சூழ்ச்சி செய்கிறது- வைகோ குற்றச்சாட்டு
மதுரை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் வேதாந்தா குழுமத்தினர் மீத்தேன் எடுக்க 2 இடங்களை ஒதுக்கீடு செய்யும் சூழ்ச்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். மே தின இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான தேச துரோக வழக்கு மத்திய அரசின் பாசிச போக்கை காட்டுகிறது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் நாடார் சமூகத்தை இழிவுபடுத்தும் பாடத்தை நீக்க வேண்டும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர், 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதனால் அவர்களது வாழ்க்கை சீரழிந்து விட்டது. அவர்களது விடுதலை தொடர்பாக கோர்ட்டு மற்றும் தமிழக அரசு உத்தரவிட்ட பிறகும், கவர்னர் தாமதம் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார். #vaiko #centralgovernment