என் மலர்

    செய்திகள்

    மரக்காணம் அருகே மொபட் மீது கார் மோதல்- தொழிலாளி பலி
    X

    மரக்காணம் அருகே மொபட் மீது கார் மோதல்- தொழிலாளி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மரக்காணம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள செட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அக்கீம் (வயது  55). தொழிலாளி. இவரது மகன் அப்துல் ஜூலைக் (35). இவர்கள் 2 பேரும் ஒரே மொபட்டில் நேற்று மாலை செட்டிக்குப்பத்தில் இருந்து மரக்காணம் நோக்கி புறப்பட்டனர்.

    மொபட்டை அப்துல் ஜூலைக் ஓட்டினார். மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு என்ற இடத்தில் மொபட் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. எதிர்பாராதவிதமாக அப்துல் ஜூலைக் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசபட்ட அக்கீம் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அப்துல் ஜுலைக் படுகாயம் அடைந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மரக்காணம் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதய ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்த அப்துல் ஜூலைக்கை மீட்டு சிகிச்சைக்காக புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×