என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி அருகே ஆவின் பால் நிறுவன ஊழியர் வீட்டில் 7 பவுன் நகை-ரூ.3 லட்சம் கொள்ளை
Byமாலை மலர்11 Oct 2018 3:03 PM GMT (Updated: 11 Oct 2018 3:03 PM GMT)
கிருஷ்ணகிரி அருகே ஆவின் பால் நிறுவன ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே அக்ரஹாரம் பகுதியில் உள்ள முல்லை நகரைச் சேர்ந்தவர் ஜான்பீட்டர் (வயது 52). இவர் ஆவின்பால் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி ஷீலா (42). இவர் அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை 2 பேரும் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டனர். பின்னர் அவர்கள் மாலை வீடுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு பக்கமாக இருந்த கிரில் கேட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டை உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சிய டைந்த அவர்கள் வீட்டினுள் சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜான்பீட்டர் கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
2 பேரும் வேலைக்கு செல்வதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு வேலைக்கு செல்லும் நேரத்தில் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×