search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்- தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ, ஆர்.எஸ்.பாரதி ஆஜர்
    X

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்- தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ, ஆர்.எஸ்.பாரதி ஆஜர்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ, ஆர்.எஸ்.பாரதி ஆஜர் ஆனார்கள். #sterliteissue #vaiko

    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து கருத்து கேட்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. மேகலாய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால், மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் வனத்துறையின் விஞ்ஞானி சதீஷ் சி.கர்கோட்டி, மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரிய விஞ்ஞானி வரலட்சுமி ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு வந்த வல்லுனர் குழுவினர் முன்னிலையில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஆஜராகி கருத்துக்களை தெரிவித்தனர்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் கீதாஜீவன், மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ஜூனன், வணிகர் பேரவை தலைவர் வெள்ளையன், வக்கீல் தொண்டன் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் ஆஜரானார்கள்.


    தீர்ப்பாயத்தின் முன்பு தூத்துக்குடி மக்கள் குவிந்திருந்தனர். பெண்கள் தங்களது நெத்தியில், ஸ்டெர்லைட் ஆலையை தடை செய் என்ற ஸ்டிக்கரை ஒட்டி இருந்தனர்.

    பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்கள் அதிகமாக வந்ததால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். #sterliteissue #vaiko

    Next Story
    ×