என் மலர்

  செய்திகள்

  மதுரை அருகே வாகனம் மோதி 40 ஆடுகள் பலி
  X

  மதுரை அருகே வாகனம் மோதி 40 ஆடுகள் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை அருகே இன்று அதிகாலை வாகனம் மோதியதில் 40 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. மேலும் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
  அவனியாபுரம்:

  மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம் மாரணி பகுதியைச் சேர்ந்தவர் கூத்தபெருமாள் (வயது 40). இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார்.

  இன்று அதிகாலை அவனியாபுரம் அருகே உள்ள வலையங்குளத்தில் ஆட்டுக்கிடை அமைப்பதற்காக தனது ஆடுகளை ஓட்டிச்சென்றார். பெருங்குடி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராத விதமாக ஆடுகளின் மீது மோதியது.

  இதில் 40 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தன. இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.

  மேலும் மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற கூத்த பெருமாள் மீதும் அந்த வாகனம் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

  அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  விபத்து குறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
  Next Story
  ×