என் மலர்

    செய்திகள்

    மதுரை வைகை ஆற்றங்கரையோரம் டிரைவர் மர்ம மரணம்
    X

    மதுரை வைகை ஆற்றங்கரையோரம் டிரைவர் மர்ம மரணம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வைகை ஆற்றங்கரை யோரம் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் ஜம்புளியாபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது30).

    இவர் மதுரையில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஆரப்பாளையம் வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் சந்திரகுமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கரிமேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சந்திரகுமார் எப்படி இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அதிக மது குடித்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×