என் மலர்
செய்திகள்

தருமபுரி பஸ் நிலையத்தில் கையெழுத்து இயக்கத்தை அன்புமணி இன்று தொடங்கி வைத்தார்
அன்புமணி ராமதாஸ் இன்று தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். #anbumani
தருமபுரி:
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் இன்று தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழைக்காலங்களில் செல்லும் உபரி நீரை நீரேற்றும் மின் மோட்டார் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட இடங்களில் நீர் நிரப்பும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் 10 லட்சம் கையெழுத்து பெறும் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இந்த கையெழுத்து இயக்க நிகழ்ச்சிக்கு உழவர் பேரியக்க மாநில செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலுசாமி தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் பி.எஸ். வெங்கடேஸ்வரன், கிழக்கு-மேற்கு மாவட்ட செயலாளர்கள் சண்முகம், இமயவர்மன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். உழவர் பேரியக்க மாநில துணை செயலாளர் சின்னசாமி வரவேற்புரை ஆற்றினார்.
மேலும் கட்சி மாநில பொறுப்பாளர்கள் பாரிமோகன், சாந்தமூர்த்தி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளை நிர்வாகிகள், சார்பு நிலை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். #anbumani
Next Story






