என் மலர்
செய்திகள்

இளம்பெண்ணை காதலித்து திருமணத்துக்கு மறுப்பு- மின்வாரிய ஊழியர் மீது வழக்கு
தூத்துக்குடியில் இளம்பெண்ணை காதலித்து திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தது குறித்து மின்வாரிய ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெர்மல்நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது28). இவர் விருதுநகரில் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் மணிமேகலை(25)க்கும் இடையே காதல் இருந்து வந்தது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மணிகண்டனை மணிமேகலை வற்புறுத்தினார். அதற்கு மணிகண்டன் மறுத்தார். இதையடுத்து மணிமேகலை தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Next Story