என் மலர்
செய்திகள்

போலீஸ் ஜீப் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து - இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் படுகாயம்
போலீஸ் ஜீப் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீசார் ஜீப்பில் நேற்று நள்ளிரவு மாதனூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜீப்பை அருண்குமார் ஓட்டினார். மாதனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பெங்களூருவில் இருந்து சென்னைக்கு சென்ற கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக போலீஸ் ஜீப் மீது மோதியது.
இதில் சாலையோர பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story