search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னிமலை அருகே குடிநீர் தட்டுப்பாடு- அதிகாரியின் ஜீப்பை சிறை பிடித்த மக்கள்
    X

    சென்னிமலை அருகே குடிநீர் தட்டுப்பாடு- அதிகாரியின் ஜீப்பை சிறை பிடித்த மக்கள்

    சென்னிமலை அருகே குடிநீர் தட்டுப்பாடு காரணமாக அதிகாரியின் ஜீப்பை சிறை பிடித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூர் ஊராட்சி மற்றும் ஓட்டப்பாறை ஊராட்சி பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    நாள் ஒன்றுக்கு முகாசி பிடாரியூர் ஊராட்சி பகுதிக்கு 5 லட்சம் லிட்டரும். ஓட்டப்பாறை ஊராட்சிக்கு 2.75 லிட்டரும் சப்ளை செய்யப்பட வேண்டும். கடந்த 20 நாட்களாக காவிரியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் மின் மோட்டார்கள் நீரில் முழ்கி குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டனர்.

    இந்த நிலையில் தற்போது மின் மோட்டார் சரி செய்யப்பட்டு தண்ணீர் சப்ளை ஆகிறது. இதில் முகாசிபிடாரியூர் ஊராட்சி பகுதிக்கு மட்டும் குடிநீர் சப்ளை ஆகி உள்ளது. ஓட்டப்பாறை கிராம பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படவில்லை. இதற்கு ஓட்டப்பாறை கிராமமக்கள் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

    அதில் முகாசிபிடாரியூர் ஊராட்சி பகுதியில் வீட்டு இணைப்புகள் அனைத்தும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட மெயின் குழாய்களில் கொடுத்துள்ளதால் ஓட்டப்பாறை ஊராட்சி பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை என கூறி உள்ளனர்.

    இதை ஆய்வு செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் ஜீப்பில் வந்து என்.பி.என்., காலனி பகுதியில் உள்ள நீர் ஏற்றும் தரை தொட்டியை பார்வையிட்டனர்.

    அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் எங்களுக்கு வழங்க வேண்டிய நீரில் அளவினை சரியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அதிகாரிகள் வந்த ஜீப்பை சிறை பிடித்து பெண்கள் கோரிக்கை வைத்தனர்.

    ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் பொதுமக்களை சமாதானம் செய்து இனி வரும் நாட்களில் கூடுதல் தண்ணீர் கொடுத்து குறிப்பிட்ட அளவு தண்ணீர் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    Next Story
    ×