என் மலர்

  செய்திகள்

  வேன் மோதி விபத்து: பட்டுக்கோட்டை பேராசிரியை பலி
  X

  வேன் மோதி விபத்து: பட்டுக்கோட்டை பேராசிரியை பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குடவாசல் அருகே வேன் மோதிய விபத்தில் பட்டுக்கோட்டை பேராசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். வேன் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  குடவாசல்:

  குடவாசல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் நாடிமுத்து (30). இவரது மனைவி கனிமொழி (வயது 23).  இவர்கள் இருவரும் குடவாசல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றி வந்தனர். 

  இந்த நிலையில் நாடிமுத்தும், கனிமொழியும் மஞ்சக்குடி அருகே உள்ள நரசிங்கம்பேட்டை பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு நடந்து வந்துள்ளனர். அப்போது அரசவனங்காடு மேலத்தெருவை சேர்ந்த கோவிந்தன் மகன் பிரகாஷ் (30) ஓட்டி வந்த வேன் நடந்து வந்த நாடிமுத்து, கனிமொழி ஆகியோர் மீது மோதியதில் இரண்டு பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே கனிமொழி பரிதாபமாக இறந்து விட்டார். நாடிமுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

  இது குறித்து குடவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து டிரைவர் பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×