என் மலர்
செய்திகள்

கருணாநிதி நினைவிடம் - மெரினா மறுக்கப்பட்ட நிலையில் ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்து மாற்று இடம் வழங்க தயார் என அறிவித்த நிலையில், மெரினாவில் இடம் ஒதுக்க ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர்
சென்னை:
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கருணாநிதியின் உடல் இறுதி அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார்.
இந்நிலையில், 80 ஆண்டு கால பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான கருணாநிதிக்கு உரிய மரியாதையுடனும், அரசியல் ரீதியாக அவருக்குள்ள தார்மீக உரிமையின் அடிப்படையிலும் தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என ஸ்டாலின் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Next Story