search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் அரசு பஸ் மோதி பெண் பலி
    X

    திருப்பூரில் அரசு பஸ் மோதி பெண் பலி

    திருப்பூரில் மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் அருகே உள்ள கரைப்புதூரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி சரஸ்வதி (45). இவர்கள் திருப்பூருக்கு துணி எடுக்க வந்தனர்.பின்னர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கடந்து கணவன்- மனைவி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது திருப்பூரில் இருந்து கோவை வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சரஸ்வதியின் கால் பஸ் சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. அவர் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார்.

    இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் சரஸ்வதியை மீட்டனர். இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனது. விபத்து நடந்த இடத்தின் அருகே தனியார் மருத்துவமனை உள்ளது. உடனே பொதுமக்கள் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று அங்குள்ள டாக்டர், நர்சுகளை அழைத்து காயம் அடைந்த சரஸ்வதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும்படி கேட்டனர்.

    ஆனால் ஆஸ்பத்திரி நிர்வாகம் சிகிச்சை அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு இருந்தது. அதனை அனுப்பும் படி பொதுமக்கள் கேட்டனர்.

    அதனையும் ஆஸ்பத்திரி நிர்வாகம் அனுப்ப மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

    அதன் பின்னர் ஆஸ்பத்திரி நிர்வாகம் ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்தது. இதற்கிடையே 108 ஆம்புலன்ஸ் அங்கு வந்து சேர்ந்தது. அதில் சரஸ்வதியை ஏற்றி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலே சரஸ்வதி பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×