search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எக்ஸ்பிரஸ் பாதையில் மின்சார ரெயில்கள் இயக்கம் நிரந்தரமாக நிறுத்த முடிவு- ரெயில்வே நடவடிக்கை
    X

    எக்ஸ்பிரஸ் பாதையில் மின்சார ரெயில்கள் இயக்கம் நிரந்தரமாக நிறுத்த முடிவு- ரெயில்வே நடவடிக்கை

    சென்னையில் எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் மின்சார ரெயில் இயக்கத்தை நிரந்தரமாக நிறுத்த தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. #SouthernRailway
    சென்னை:

    மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்த பயணிகள் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பக்கவாட்டு சுவர் மீது மோதியதில் 5 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த ரெயில் விபத்து குறித்து தெற்கு ரெயில்வே பாதுகாப்பு கமி‌ஷனர் மனோகரன் ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு சட்டப்பூர்வ விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    சென்னை ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் நேற்று தொடங்கிய விசாரணை இன்று 2-வது நாளாக நீடித்தது. பொதுமக்கள் ரெயில்வே ஊழியர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக அவர் விசாரணை நடத்தினார். பொதுமக்கள் 12 பேர் உள்பட 18 பேரிடம் நேற்று விசாரணை முடிந்து விட்டது. இன்று 2-வது நாளாக ஊழியர்களிடம் விசாரணை நடக்கிறது.

    விசாரணை ஒருபுறத் நடைபெற்று வரும் நிலையில் பரங்கிமலை சம்பவத்தை தொடர்ந்து எக்ஸ்பிரஸ் பாதையில் மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ‘பாஸ்ட்’ என்ற பெயரில் பீக்அவர்சில் மின்சார ரெயில் இயக்கப்பட்ட போது தான் இந்த விபத்து நடந்தது.

    மேலும் பரங்கிமலை ரெயில் நிலையம் 4-வது பிளாட்பாரம் அருகே உள்ள தடுப்பு சுவரும் விபத்திற்கு காரணம் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.

    ஆனால் பக்கவாட்டு சுவரை முற்றிலும் அகற்றினால் அதிகளவு விபத்து- உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் செல்லும் மெயின் பாதையை கடக்க நேரிடும் என்பதாலும் பக்க வாட்டு சுவரை அகற்றுவது பெரிய இடர்பாடும் என்று கருதப்படுகிறது. அதனால் பக்கவாட்டில் சுவர்களின் உயரம் குறைக்கப்படுகிறது.



    அதேபோல கூட்ட நெரிசலை குறைப்பதற்காக எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் மின்சார ரெயில் இயக்கத்தையும் நிரந்தரமாக நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    காலை மற்றும் மாலை நேரங்களில் கடற்கரை- செங்கல்பட்டு- திருமால்பூர் இடையே இயக்கப்படும் ரெயில்கள் அனைத்தும் இனி மின்சார ரெயில்கள் செல்லும் வழியிலேயே செல்லவும், இனிமேல் எக்ஸ்பிரஸ் பாதையை பயன்படுத்தக் கூடாது எனவும், ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    தற்போது எக்ஸ்பிரஸ் பாதையில் மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அது தொடர்ந்து நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #SouthernRailway
    Next Story
    ×