என் மலர்

  செய்திகள்

  பெரம்பலூரில் லாரி, டிராக்டர்களில் ரூ.1¼ லட்சம் மதிப்பிலான 12 பேட்டரிகள் திருட்டு
  X

  பெரம்பலூரில் லாரி, டிராக்டர்களில் ரூ.1¼ லட்சம் மதிப்பிலான 12 பேட்டரிகள் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரம்பலூரில் லாரி, டிராக்டர்களில் ரூ.1¼ லட்சம் மதிப்பிலான 12 பேட்டரிகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
  பெரம்பலூர்:

  பெரம்பலூர் மினி லாரி ஓட்டுனர் உரிமையாளர்கள் சங்கத்தின் மினி லாரிகள் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலக்கரை ஸ்டாண்டில் நிறுத்தப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் டிரைவர்கள் தங்களது லாரிகளை பாலக்கரை ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று காலையில் வந்து பார்த்த போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 7 லாரிகளில் பேட்டரிகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மர்ம நபர்கள் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் பேட்டரிகளை கழற்றி திருடி சென்றது தெரியவந்தது. இதில் ரஞ்சித்குமார் என்பவரின் லாரியில் பேட்டரியை திருடிய மர்ம நபர்கள் டீசல் டேங்கை திறந்து, அதில் இருந்த 200 லிட்டர் டீசலையும் திருடி சென்றுள்ளனர்.

  இதேபோல் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள ஆவின் பால்பண்ணையில் ஒப்பந்த முறையில் இயக்கப்படும் 2 லாரிகளில் பேட்டரி மற்றும் டீசலையும், ஒரு லாரியில் பேட்டரியையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் பாஸ்கர் என்பவர் நடத்தி வரும் டிராக்டர் பழுது பார்க்கும் பட்டறையில் நின்று கொண்டிருந்த 2 டிராக்டர்களின் பேட்டரி களையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

  இது சம்பந்தமாக டிராக்டர், லாரிகளின் உரிமையாளர்கள் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், பெரம்பலூர் போலீஸ் நிலையத்திலும் புகார் மனு கொடுத்தனர். அதில், லாரிகளில் பேட்டரி, டீசலையும், டிராக்டர்களில் பேட்டரியையும் திருடிய மர்ம நபர்களை உடனடியாக கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஒரே நாளில் 10 லாரிகள், 2 டிராக்டர்களின் பேட்டரிகள் திருடப்பட்டுள்ளதால், அதில் ஈடுபட்ட மர்ம நபர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், அவர்கள் திட்டமிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருடப்பட்ட 12 பேட்டரிகளின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என்று டிராக்டர், லாரிகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் நான்கு ரோடு அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரிகளில் பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது. 
  Next Story
  ×