search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை ஆணையம் உறுதியாக இருக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
    X

    காவிரி மேலாண்மை ஆணையம் உறுதியாக இருக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

    31.24 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடுவதில் காவிரி மேலாண்மை ஆணையம் உறுதியாக இருக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். #GKVasan
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தின் முடிவில், கர்நாடக அரசு தமிழகத்திற்கு இந்த மாதம்(ஜூலை) 31.24 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும் என்பதில் ஆணையம் உறுதியோடு இருக்க வேண்டும். அது மட்டுமல்ல இந்த மாதத்திற்கான தண்ணீரை திறந்து விடுவதோடு, வருகின்ற மாதம் தோறும் தமிழகத்திற்கான தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என்பதில் மேலாண்மை ஆணையம் கண்காணிப்பை மேற்கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவு வறட்சியின் விளிம்பில் இருந்த தமிழக விவசாயிகளுக்கு கிடைத்திருக் கின்ற முதல் வெற்றியாகும். எனவே தற்போதைய மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வுக்கு வழி வகுக்கும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை முறையாக செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #GKVasan
    Next Story
    ×