என் மலர்
செய்திகள்

காட்டுமன்னார்கோவில் அருகே போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்- 2 பேர் கைது
காட்டுமன்னார்கோவில் அருகே போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் அரசு மணல் குவாரி யாடு உள்ளது. அங்கு தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கண்டமங்கலத்தை சேர்ந்த பால முருகன் (வயது 37) மற்றும் பாலச்சந்திரன் (36) ஆகிய 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை ஆபாசமாக பேசி, தகராறில் ஈடுபட்டனர். பணியில் இருந்த காட்டு மன்னார்கோவில் தலைமை காவலர் சண்முக சுந்தரம், ஏன் இங்கு நின்று கொண்டு தகராறில் ஈடுபடுகிறீர்கள் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்றார்.
இதை கேட்டு ஆத்திரமடைந்த பாலமுருகன், பால சந்திரன் ஆகியோர் சேர்ந்து தலைமை காவலர் சண்முகசுந்தரத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து காட்டு மன்னார் கோவில் போலீசில் சண்முகசுந்தரம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் வழக்குபதிவு செய்து போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாலமுருகன், பாலசந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews

Next Story