என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீட் தேர்வில் குறைந்த மார்க் வாங்கிய மாணவி மாயமானார்
Byமாலை மலர்7 Jun 2018 8:39 AM IST (Updated: 7 Jun 2018 8:39 AM IST)
‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் வீட்டைவிட்டு வெளியேறி மாயமான மாணவி கோட்டீஸ்வரியை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்தவர் கோட்டீஸ்வரி (வயது 19). பிளஸ்-2 படித்துள்ள இவர் ஏற்கனவே ஒருமுறை ‘நீட்’ தேர்வு எழுதினார். அதில் பெற்ற மார்க் அடிப்படையில், பல் மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கான இடம் கிடைத்தது.
ஆனால், அவர் அதை ஏற்கவில்லை. எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டும் என்ற ஆசையில் தற்போது மீண்டும் ‘நீட்’ தேர்வு எழுதினார். கடந்த முறையைவிட இப்போது குறைவான மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது. இந்தநிலையில், நேற்று முன்தினம் முதல் மாணவி கோட்டீஸ்வரியை காணவில்லை. பெற்றோர் அவரை தேடினார்கள். தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து மாணவி கோட்டீஸ்வரியை தேடி வருகிறார்.
இந்தநிலையில், கோட்டீஸ்வரி செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் தனது பெற்றோருக்கு தகவல் அனுப்பியுள்ளார். “நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளதால் நான் வீட்டைவிட்டு வெளியேறி வந்துவிட்டேன். என்னை யாரும் தேடாதீர்கள்” என்று அவர் எஸ்.எம்.எஸ் தகவலில் குறிப்பிட்டுள்ளார். அவர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயிலில் ஏறி சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

Next Story
×