என் மலர்
செய்திகள்

திருவாரூர் அருகே திருமண வீட்டில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
திருவாரூர் மாவட்டம், ஏரவாஞ்சேரி அருகே திருமண வீட்டில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், ஏரவாஞ்சேரி அருகே உள்ள கடகங்குடியை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவர் தனது வீட்டில் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினர்.
இதில் கலந்து கொண்ட அவரது அண்ணன் மகன் ரஞ்சித் என்பவர் மதுபோதையில் எனக்கு ஏன் அழைப்பிதழ் கொடுக்கவில்லை என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் நாற்காலி மற்றும் டியூப்லைட்டுகளை உடைத்ததால் மாரியப்பன் என்பவர் அவரை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித் மாரியப்பனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுபற்றி மாரியப்பன் ஏரவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தார். #Tamilnews

Next Story