என் மலர்

  செய்திகள்

  வலங்கைமான் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
  X

  வலங்கைமான் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வலங்கைமான் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  வலங்கைமான்:

  திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே நார்த்தாங்குடி ஊராட்சி பாப்பாக்குடியில் வசிப்பவர் வேணுகோபால்.

  வழக்கம் போல் வேணுகோபால் அவரது மனைவி ராஜேஸ்வரி இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்துள்ளது. ராஜேஸ்வரி அதிர்ச்சியடைந்து சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1½ பவுன் நகைகள் மற்றும் ரூ.6ஆயிரம் திருட்டுபோனது. தெரியவந்துள்ளது.

  இச்சம்பவம் குறித்து அவர் வலங்கைமான் போலீசில் புகார் அளித்துள்ளார். இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×