என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்தர்வக்கோட்டை அருகே அரசு பஸ் மோதி முதியவர் பலி
    X

    கந்தர்வக்கோட்டை அருகே அரசு பஸ் மோதி முதியவர் பலி

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மட்டையன் பெட்டியை சேர்ந்தவர் வெள்ளைசாமி  (வயது 70). இவர் நேற்று மாலை மட்டையன்பெட்டி அருகே தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையை கடக்க முயன்றார். அப்போது தஞ்சாவூரில் இருந்து வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக  வெள்ளைசாமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த  வெள்ளைசாமியை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளைசாமி இறந்தார்.

    இது குறித்து கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் வழக்கு பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் ஆரோக்கிய சாமியை கைது செய்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
    Next Story
    ×