என் மலர்
செய்திகள்

கும்பகோணத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
கும்பகோணம்:
கும்பகோணம், அருகே சாக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் குமார் (வயது 50). இவரது மனைவி கல்பனா .
இவர்கள் இருவரும் நேற்று மாலை கடம்பங்குடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர்கள் அருகில் வந்த வாலிபர் திடீரென கல்பனா கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறிக்க முற்பட்டார். சுதாரித்து கொண்ட கல்பனா செயினை பறிக்க விடாமல் தடுத்தார். ஆனால் அந்த வாலிபர் வலுகட்டாயமாக செயினை பறித்து தப்பி சென்றார். இதில் குமார் மற்றும் கல்பனா ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து குமார் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் செம்போடையைச் சேர்ந்த தமிழ்செல்வன் மகன் வெற்றிவேல் (25) செயின் பறித்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.