search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவோணம் அருகே அம்பேத்கர் சிலையை உடைத்து சேதப்படுத்திய 4 வாலிபர்கள் கைது
    X

    திருவோணம் அருகே அம்பேத்கர் சிலையை உடைத்து சேதப்படுத்திய 4 வாலிபர்கள் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருவோணம் அருகே அம்பேத்கர் சிலையை உடைத்து சேதப்படுத்திய 4 வாலிபர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவோணம்:

    திருவோணம் அருகே வெங்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் எதிரே உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையின் தலை கடந்த 3 நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டது.

    இதுகுறித்து பல்வேறு அமைப்பினர் கொடுத்த புகாரின்பேரில் வாட்டாத்திக் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தும், தனிப்படை அமைத்தும் தீவிரமாக விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுகுழவாய்ப்பட்டியை சேர்ந்த சேகர் மகன் விக்னேஸ்(வயது20), இடையன்காடு கள்ளர் தெருவை சேர்ந்த செல்லையன் மகன் மணி(24), இடையன்காடு சேகர் மகன் தினேஷ்(18), வெங்கரை மேலத்தெரு பாலசுப்பிரமணியன் மகன் அஜித்(24) ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இவர்கள் 4 பேரும் தான் அம்பேத்கர் சிலையை உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×