search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை டிராக்டரை ஏற்றி கொல்ல முயற்சி- டிரைவர் கைது
    X

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை டிராக்டரை ஏற்றி கொல்ல முயற்சி- டிரைவர் கைது

    விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆரோவில் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜ் மற்றும் போலீசார் பட்டானூரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் டிப்பரை நிறுத்துமாறு அதன் டிரைவரிடம் போலீசார் கூறினர். அதற்கு அந்த டிரைவர் டிராக்டர் டிப்பரை நிறுத்தாமல் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜ் மீது மோத முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜ், அங்கிருந்து விலகினார்.

    பின்னர் அந்த டிராக்டர் டிப்பரின் டிரைவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் புதுச்சேரி மாநிலம் சிலாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த நாராயணசாமி (வயது 52) என்பது தெரிந்தது.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்து, டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் நாராயணசாமியை போலீசார், வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×