search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சருக்கு ஆதரவாக திவாகரன் செயல்படுகிறார்- முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி
    X

    முதலமைச்சருக்கு ஆதரவாக திவாகரன் செயல்படுகிறார்- முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஆதரவாக திவாகரன் செயல்படுகிறார் என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.#ADMK #EdappadiPalanisamy #OPanneerselvam #senthilBalaji #Divakaran
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அம்மா மக்கள் முள்னேற்ற கழகம் சார்பில் தொழிற்சங்க தொடக்க விழா மற்றும் மே தின பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.செல்வம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மேற்கு மண்டல அமைப்பாளருமான செந்தில்பாலாஜி கொடியேற்றி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.-

    தற்போது அம்மா அணி என ஆரம்பித்துள்ள திவாகரனுடன் நிர்வாகிகள் யாரும் இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்த திவாகரன் தற்போது வெளிப்படையாக செயல்பட்டு வருகிறார்.



    திவாகரன் எத்தனை முறை பொதுச் செயலாளர் சசிகலாவை சிறையில் சந்தித்து உள்ளார்?. ஆலோசனைகள் கேட்டு இருப்பார்? என்பதை விளக்க வேண்டும். பொய்யான கருத்துகளை மக்கள் மத்தியில் கூறி குழப்பி வருகிறார்.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்காக திவாகரன் பணியாற்றவில்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்துள்ள போக்குவரத்து தொழிலாளர்களை பழிவாங்கும் விதமாக பணியிட மாற்றம் செய்வது உள்ளிட்ட செயல்களில் மட்டுமே இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #EdappadiPalanisamy #OPanneerselvam #senthilBalaji #Divakaran
    Next Story
    ×