என் மலர்

    செய்திகள்

    காஞ்சீபுரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
    X

    காஞ்சீபுரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காஞ்சீபுரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த குருவிமலை பள்ளத்தெரு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    இங்குள்ள மக்களுக்கு கடந்த 8 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்பட வில்லை. இதனை கண்டித்து அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் காஞ்சீபுரம்- உத்திர மேரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மாகரல் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகத்திற்கு செல்வோரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×