என் மலர்

  செய்திகள்

  மதுராந்தகம் அருகே சாய்பாபா கோவிலில் உண்டியல் உடைப்பு- நகை கொள்ளை
  X

  மதுராந்தகம் அருகே சாய்பாபா கோவிலில் உண்டியல் உடைப்பு- நகை கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுராந்தகம் அருகே சாய் பாபா கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் மற்றும் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
  மதுராந்தகம்:

  மதுராந்தகம் அருகே நல்லாமூர் மலை மேல் சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. நேற்று இரவு வழக்கம்போல் பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டி சென்றனர். காவலர் சுப்புராயன் கோவில் வளாகத்தில் வசித்து வருகிறார்.

  இன்று காலை வழக்கம் போல் கோவிலை திறந்து விட காவலர் சுப்புராயன் வந்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  கோவிலில் இருந்த இரண்டு உண்டியல்கள் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 பவுன் மதிப்பிலான 4 தங்க தாலிகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருந்தது. உண்டியலில் சுமார் ஒரு லட்சம் பணம் இருந்ததாக தெரிகிறது.

  இது குறித்து சித்தாமூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×