என் மலர்

  செய்திகள்

  குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை: முதலமைச்சர், டி.ஜி.பி. ஆலோசனை
  X

  குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை: முதலமைச்சர், டி.ஜி.பி. ஆலோசனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் சந்தித்துப் பேசினார். #GutkhaScam #GutkhaCBIProbe #EdappadiPalanisamy #DGP
  சென்னை:

  தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதாக தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதை சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பி ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இது அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து குட்கா விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஐகோர்ட்டின் உத்தரவுக்குப் பிறகு தலைமைச் செயலகத்துக்கு வந்தார்.

  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் சந்தித்துப் பேசினார். அரை மணி நேரத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நீடித்தது.

  இதில் குட்கா விவகாரம் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. குட்கா விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடந்ததால், அது முக்கிய சந்திப்பாக கருதப்படுகிறது.  முன்னதாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோரை தலைமைச் செயலகத்தில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நேற்று சந்தித்தார். #GutkhaScam #GutkhaCBIProbe #EdappadiPalanisamy #DGP
  Next Story
  ×