என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் பூச்சி மருந்து தட்டுப்பாடு கிடையாது- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
    X

    தமிழகத்தில் பூச்சி மருந்து தட்டுப்பாடு கிடையாது- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

    தமிழகத்தில் பூச்சி மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை என்று பவானியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசினார்.
    பவானி:

    பவானி ஒன்றியத்திற்குட்பட்ட ஜம்பை பேரூராட்சி, நல்லிபாளையம் பகுதியில் கால்நடை மருத்துவமனை கிளை திறப்புவிழா நடைபெற்றது.

    ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்தார். தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டார்.

    விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இதுவரை 8 லட்சத்து 85 ஆயிரம் விலையில்லா ஆடுகளும் 78 ஆயிரம் கறவை மாடுகளையும் வழங்கபட்டுள்ளது.

    இந்த ஆண்டு 1 லட்சம் கறவை மாடுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு உள்பட மாவட்டங்களில் கறவை மாடுகளும் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட உள்ளது.

    தமிழகத்தில் பூச்சி மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை. யாரையும் யாரும் தவறாக பேச கூடாது அது நாகரீகம் அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், எஸ்.எம்.தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். #UdumalaiRadhakrishnan
    Next Story
    ×