search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசுக்கு எதிராக சனிக்கிழமை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?
    X

    மத்திய அரசுக்கு எதிராக சனிக்கிழமை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக சனிக்கிழமை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் என தெரிகிறது. #CauveryManagementBoard
    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார காலகெடு இன்றுடன் முடிகிறது. ஆனால்  மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள ஸ்கீம் (திட்டம்) தொடர்பாக விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

    இந்த சூழ்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நடைமுறைப்படுத்தாவிட்டால், தமிழக அரசு சார்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டபோது அவர் சந்திக்கவில்லை. எனவே, மீண்டும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்பது பற்றியும் கூட்டத்தில் விவாதித்தனர்.



    இந்த கூட்டத்தில், காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்தை எட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நாளை மறுநாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யவும் அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. #CauveryManagementBoard 
    Next Story
    ×