என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் கொள்ளை- செந்துறையில் பொதுமக்கள் போராட்டம்
    X

    தொடர் கொள்ளை- செந்துறையில் பொதுமக்கள் போராட்டம்

    செந்துறை பகுதியில் தொடர்கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதை கண்டித்து உடையார்பாளையம் சாலையில் பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா அலுவலகம் பகுதியில் வசித்து வருபவர் கலையரசன் (வயது 44), சிமெண்ட் ஆலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சம்பவத்தன்று கலையரசன் வழக்கம்போல் காலையில் வேலைக்கு சென்றுவிட்டார். மகள் பள்ளிக்கு சென்று விட்டார். தேன்மொழி தனது மகன் காவியத்தமிழனுடன் திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

    வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை கடப்பாறையால் உடைத்துள்ளனர். மேலும் பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க காசு, செயின், மோதிரம், கம்மல் உட்பட 7 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிக் கொலுசுகளையும் திருடி சென்றனர். 

    இது குறித்து அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் செந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் செந்துறை பகுதியில் தொடர்கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதை கண்டித்து  உடையார்பாளையம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த செந்துறை போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    Next Story
    ×