என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்துறை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
    X

    செந்துறை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    செந்துறை அருகே மருதூர் தெற்குப்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக சரியாக குடிநீர் வராததால் இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மருதூர் தெற்குப்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக சரியாக குடிநீர் வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

    இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை செந்துறை - ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் பள்ளி , வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். தகவல் அறிந்த ஆண்டிமடம் ஆணையர் அருளப்பன் , செந்துறை காவல் அதிகாரி மோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று  மறியலில் ஈடுப்பட்டவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தி,  உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். #tamilnews
    Next Story
    ×