என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கை மாவட்டத்தில் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை
    X

    சிவகங்கை மாவட்டத்தில் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை

    சிவகங்கை மாவட்டத்தில் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா கீழநீர்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா (வயது 70). உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், வாழ்க்கையில் விரக்தியடைந்து வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து வந்தார்.

    இது குறித்து அவரது மனைவி மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் எஸ்.பி. மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    இளையான்குடி தாலுகா நகரக்குடியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (29). மனநிலை பாதிக்கப்பட்ட இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜபாண்டி இறந்தார்.

    இது குறித்து அவரது தாயார் முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் இளையான்குடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×