search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் சரிவு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் சரிவு

    மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து 83 கன அடியாக இருந்தது. இன்று நீர்வரத்து மீண்டும் சரிந்து 41 கன அடியாக குறைந்தது.
    சேலம்:

    மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து 83 கன அடியாக இருந்தது. இன்று நீர்வரத்து மீண்டும் சரிந்து 41 கன அடியாக குறைந்தது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 41.47 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் குறைந்து 41.39 அடியாக குறைந்தது.

    இனி வரும் நாட்களில் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. #tamilnews
    Next Story
    ×