என் மலர்

  செய்திகள்

  பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஓட்டல்களில் மது விற்க அனுமதி: தமிழக அரசு
  X

  பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஓட்டல்களில் மது விற்க அனுமதி: தமிழக அரசு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் சோழிங்கநல்லூர் நெடுஞ்சாலைகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பார்களை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  சென்னை:

  புறநகர்பகுதி நெடுஞ்சாலைகளில் மதுக்கடை திறக்க சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து நெடுஞ்சாலைகளில் உள்ள ஓட்டல்களில் பார்களை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

  சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களை யொட்டியுள்ள மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நட்சத்திர ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன.

  சென்னையை அடுத்துள்ள பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் சோழிங்கநல்லூர் பகுதியை சுற்றி நிறைய ஓட்டல்கள் உள்ளன. இவை அனைத்தும் கடந்த இரு வருடங்களாக பார் நடத்த அனுமதி இல்லாததால் மூடப்பட்டன.

  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் உள்ள அந்த பகுதிகளில் 40 ஓட்டல்களில் 2 ஆயிரம் அறைகள், தொழில் ரீதியான பேச்சுவார்த்தை கூடாரம் உள்ளிட்ட வசதிகளுடன் அமையப் பெற்றுள்ளன.

  கடந்த 5 வருடமாக ஓட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. ‘பார்’ நடத்த அனுமதி இல்லாததால் அதனை சார்ந்த தொழில்கள் முடங்கின.

  இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு பார் நடத்த அனுமதி வழங்கி இருப்பதால் இனி ஒ.எம்.ஆர். பகுதியில் உள்ள ஓட்டல்களில் அறைகள் நிரம்பக்கூடும்.  வெளிநாடுகளில் இருந்தும், பிற மாநிங்களில் இருந்தும் தொழில் ரீதியாக ஓட்டல்களில் தங்கக்கூடியவர்கள் அதிக அளவு வருவார்கள். ‘ரெஸ்டாரண்ட்’டை ஐ.டி. ஊழியர்கள் அதிக அளவு பயன்படுத்தக்கூடும். இதன் மூலம் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பார்களில் கூட்டம் இனி களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  டாஸ்மாக் கடைகளை அரசு குறைத்து வரும் நிலையில் நட்சத்திர ஓட்டல்களில் மது பார்களை விரைவில் திறக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. #tamilnews
  Next Story
  ×