என் மலர்
செய்திகள்

பரமக்குடியில் ஆன்லைன் பத்திரப்பதிவை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
பரமக்குடி ரியல் எஸ்டேட் சங்கத்தினர் சார்பில் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பரமக்குடி:
ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை கைவிடக்கோரியும், தமிழக அரசை வலியுறுத்தியும் பரமக்குடி ரியல் எஸ்டேட் சங்கத்தினர் சார்பில் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் ஆலம் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஹைலுக் சண்முகம், துணை செயலாளர் ஜான்செல்வம், பொருளாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் சிகாமணி அனைவரையும் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். ஆன்லைன் பதிவு செய்ய தேவையான உபகரணங்கள் இல்லை. ஒரு நாளைக்கு 10 பத்திரங்கள் தான் பதிவு செய்ய முடிகிறது. எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் வியாபாரிகள் சங்க துணை தலைவர் ஜீவானந்தம், சவுராஷ்டிரா சபை துணை தலைவர் ரமேஷ்பாபு, சங்க கவுரவ தலைவர் பாபு, செயற்குழு உறுப்பினர்கள் முருகானந்தம், ராமலட்சுமி, கல்பனாதேவி உருமணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
முடிவில் செயற்குழு உறுப்பினர் சண்முகவேல் நன்றி கூறினார். #tamilnews
Next Story