search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்களின் பெற்றோருக்கு மொபைல் செயலி அறிமுகம்
    X

    மாணவர்களின் பெற்றோருக்கு மொபைல் செயலி அறிமுகம்

    மாணவர்களின் பெற்றோருடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துவதற்கான தனி மொபைல் செயலி சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    சென்னை:

    பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் அவர்கள் எப்படி படிக்கிறார்கள்? பழக்க வழக்கம் எப்படி இருக்கிறது? என்பதையெல்லாம் அறிய விரும்பினாலும் வேலைப் பழு, பல்வேறு சூழ்நிலைகளால் முடிவதில்லை.

    இதை சாக்காக வைத்து அடிக்கடி பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு நண்பர்களுடன் சுற்றுவது, மதிப்பெண் பட்டியலில் போலியாக கையெழுத்தை போடுவது போன்ற பல தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

    இந்த நிலையில் மாணவர்களின் பெற்றோருடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துவதற்கான தனி மொபைல் செயலி சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் முதல் முறையாக இந்த வசதியை பள்ளிக்கரணையில் உள்ள ஸ்ரீசங்கர பால வித்யாலயா தனியார் பள்ளி ஏற்பாடு செய்துள்ளது. இது பற்றி அந்த பள்ளியின் தாளாளர் வேத சுப்பிரமணியன் கூறியதாவது:-

    “எங்கள் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ- மாணவிகளின் பெற்றோருக்கு இந்த செயலி பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்குரிய அடையாள குறியீட்டு எண், ரகசிய எண் ஆகியவற்றை வழங்குவோம்.

    தினமும் இந்த செயலியில் மாணவர்களின் வருகை விபரம், வீட்டுப் பாடங்கள், தேர்வு மதிப்பெண்கள், தேர்வு தேதிகள், ஆசிரியர் குறிப்புகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பதிவேற்றம் செய்யப்படும்.

    பெற்றோர்களும் விடுமுறை கேட்பது உள்ளிட்ட விபரங்களையும் இந்த செயலி மூலம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ள முடியும்” என்றார். #Tamilnews
    Next Story
    ×