என் மலர்

    செய்திகள்

    பேஸ்புக் நண்பர் நகையுடன் நள்ளிரவில் தப்பி ஓட்டம்
    X

    பேஸ்புக் நண்பர் நகையுடன் நள்ளிரவில் தப்பி ஓட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னையில் பேஸ்புக் நட்பால் பெண்ணுடன் பழகிய ஒருவர் நகையுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.
    சென்னை:

    பேஸ்புக் இணையதளமானது உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை நட்பால் இணைத்து வருகிறது. இதன்மூலம் ஒருவருக்கொருவர் நட்பால் பழகிக் கொள்கிறார்கள்.

    சென்னையில் பேஸ்புக் நட்பால் பெண்ணுடன் பழகிய ஒருவர் நகையுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது. அவர் பெயர் மனோஜ் குமார் (வயது 22). திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர். இவர் பேஸ்புக் மூலம் சென்னை செங்குன்றத்தை சேர்ந்த நித்யா என்ற பெண்ணுடன் நட்புடன் இருந்தார்.

    மனோஜ் குமார் மீது நித்யாவுக்கு நம்பிக்கை ஏற்பட்டதால் கடந்த 9-ந்தேதி தனது வீட்டுக்கு வரவழைத்து உபசரித்தார். நள்ளிரவில் நித்யாவின் நகையுடன் மனோஜ்குமார் தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நித்யா காலையில் கணவரிடம் நள்ளிரவில் வெளியே இயற்கை உபாதை களிக்க சென்றபோது ஒருவன் நகையை பறித்துச் சென்று விட்டதாக கூறினார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் நித்யாமீது சந்தேகம் அடைந்து அவரது செல்போனை வாங்கிப் பார்த்தபோது அதில் முதல்நாள் இரவு நித்யா வேறொரு எண்ணுடன் நீண்ட நேரம் பேசியது தெரியவந்தது. அந்த எண் மனோஜ்குமாருடையது என்றும் அவருடன் நித்யா பேஸ்புக்கில் நட்பில் இருப்பதும் தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நித்யா தனது பேஸ்புக் நண்பரை வீட்டுக்கு அழைத்ததையும், நள்ளிரவில் அவர் நகையுடன் மாயமானதையும் ஒப்புக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து செங்குன்றம் போலீசார் பழனிக்கு விரைந்து சென்று மனோஜ்குமாரை பிடித்து விசாரித்தனர். அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார். நகையை திருடிய பின்பு பேஸ்புக் இணைப்பை துண்டித்துக் கொண்டார். போலீசார் அவர்மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். #Tamilnews
    Next Story
    ×